தட்டச்சு தேர்வு: 636 மாணவ, மாணவிகள் எழுதினர்


தட்டச்சு தேர்வு: 636 மாணவ, மாணவிகள் எழுதினர்
x

ராசிபுரம் அருகே நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 636 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாமக்கல்

ராசிபுரம்

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நேற்று தட்டச்சு இளநிலை மற்றும் மேல்நிலை தேர்வுகள் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

இந்த தேர்வுக்கு முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் மையத்தின் முதன்மை கண்காணிப்பாளராக இருந்து தேர்வு நடத்தினார். இந்த தேர்வு மையத்தில் ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, வையப்பமலை, அத்தனூர், சிங்களாந்தபுரம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், பட்டணம், போடிநாயக்கன்பட்டி, காக்காவேரி உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 27 தட்டச்சு பள்ளிகளில் இருந்து 1,091 பேர் 2 நாட்கள் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளான நேற்று காலையில் இளநிலை தேர்வும், மேல் நிலை (ஹையர்) தேர்வும் நடந்தது. நேற்று நடந்த தேர்வில் 636 மாணவ, மாணவிகள் தேர்வு (தட்டச்சு செய்தல்) எழுதினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 455 மாணவ, மாணவிகள் இளநிலை மற்றும் மேல் நிலை தேர்வு எழுதுகின்றனர்.


Next Story