619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்
ராசிபுரத்தில் 619 மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர்.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப வாரியம் மூலம் தட்டச்சு இளநிலை மற்றும் முதுநிலை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் தேர்வு நடந்தது. தேர்வில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பட்டணம், வெண்ணந்தூர், புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, வடுகம் உள்பட பல பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர். நேற்று நடந்த தேர்வில் 392 பேர் இளநிலை தேர்வும், 227 பேர் முதுநிலை தட்டச்சு தேர்வும் உள்பட 619 மாணவ மாணவிகள் தட்டச்சு தோ்வு செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இளநிலையில் 203 பேரும், முதுநிலையில் 202 பேரும் உள்பட 405 மாணவ மாணவிகள் தட்டச்சு இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர். இரண்டு நாட்களாக நடக்கும் இந்த தேர்வில் 1,025 மாணவ மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர்.
முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் தேர்வு கண்காணிப்பாளராக இருந்து தேர்வை நடத்தினார்.