தட்டச்சு தேர்வு தொடங்கியது


தட்டச்சு தேர்வு தொடங்கியது
x

தட்டச்சு தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர்

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 154 மாணவ- மாணவிகளும், சீனியர் கிரேடில் 96 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 337 பேரும், சீனியர் கிரேடில் 221 பேரும் என மொத்தம் 808 பேர் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் ஜூனியர் கிரேடில் 3 குழுக்கள், சீனியர் கிரேடில் 2 குழுக்களுக்கு என மொத்தம் 5 குழுக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அறை கண்காணிப்பாளர்கள், தட்டச்சு தேர்வினை கண்காணித்தனர்.

2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 82 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 96 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 144 பேரும், சீனியர் கிரேடில் 170 பேரும், உயர்வேக தேர்வில் (ஹைஸ் பீடு) தமிழ் மொழி, ஆங்கில மொழியில் தலா ஒருவரும், தமிழ் மொழி பிரி ஜூனியர் கிரேடில் 2 பேரும், ஆங்கில மொழி பிரி ஜூனியர் கிரேடில் 11 பேரும் என மொத்தம் 507 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்க உள்ளனர், என்று மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரும், கல்லூரி முதல்வருமான ராஜசேகரன் தெரிவித்தார்.


Next Story