உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா
விக்கிரமசிங்கபுரம் அருகே உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள வராகபுரம் உச்சினி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த மாதம் 25-ந் தேதி கால் நாட்டுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பூந்தட்டு எடுத்து வருதல், பாபநாசத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், அம்மன் அழைப்பு, உச்சிமாரியம்மன் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பம் ஏற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
கடந்த 1-ந் தேதி காலையில் பாபநாசத்தில் இருந்து கிரககுடம் எடுத்து வருதல், செல்வ விநாயகர் கோவிலில் பால்குடம் எடுத்து வருதல், மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம், மாலையில் மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, பக்தர்கள் பூக்குழி இறங்குதல், முளைப்பாரி எடுத்து வருதல், சாமக்கொடை நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் முளைப்பாரி எடுத்து பாபநாசம் கொண்டு செல்லுதல், மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தலைவர் மாரிமுத்து, செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் மாயாண்டி மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.