உடன்குடி பகுதிமக்கள் பனைஓலை சேகரிப்பில் தீவிரம்


உடன்குடி  பகுதிமக்கள்  பனைஓலை சேகரிப்பில் தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு உடன்குடி பகுதிமக்கள் பனைஓலை சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி இரவு கொண்டாடப்படுகிறது, இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோவில்முன்பு சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு நடத்தப்படும். வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றி சுவாமிக்கு படையல் போட்டு வழிபடுவது வழக்கம்.

உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் பனைமரம் மூலம் உருவாக்கப்படும் சொக்கப்பனை கொளுத்தப்படும். சில இடங்களில் பப்பாளி மரம், வாழை மரம் மூலம் சொக்கப்பனை கொளுத்தப்படும். இவைகள் கிடைக்காத இடங்களில் உயரமான கம்புகளில் குறுக்காக கம்புகளைகட்டி பனைமர ஒலைகளை கட்டி கோவில் முன்பு வைத்து சொக்கப்பனை கொளுத்துவார்கள். இதற்காக உடன்குடி பகுதி மக்கள் பனைஓலை சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story