உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளியம்மன் கோவில் ஆனி திருவிழா


உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளியம்மன் கோவில் ஆனி திருவிழா
x

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளியம்மன் கோவில் ஆனி திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி கொட்டங்காடு தேவி பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆனித் திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது.

இதையொட்டி முதல் நாள் காலையில் பவளமுத்து விநாயகர் மற்றும் தேவி பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், இரவு 7 மணிக்கு நாட்டு மக்கள் நலம் பெற வேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. 2- ம் நாள் இரவு 9 மணிக்கு அம்மன் ஊஞ்சல் சேவை வழிபாடும், தொடர்ந்து அம்மன் உள்பிரகார சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story