உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா


உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x

சேரன்மாதேவியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு, சேரன்மாதேவி பரத்வாஜ் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், மதிய உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கி மதிய உணவு மற்றும் பொருட்கள் வழங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜாண்ரவீந்தர் மற்றும் துணை அமைப்பாளர்கள் வேல்முருகன், முருகன், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், சேரன்மாதேவி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு, மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், நகர செயலாளர்கள் சேரன்மாதேவி மனிஷா செல்வராஜ், பத்தமடை சிந்தாமதார், சேரன்மாதேவி பேரூராட்சி துணைத்தலைவர் பால்மாரி, வழக்கறிஞர் அணி செல்வசூடாமணி, கூனியூர் பிரகாஷ், மாவட்ட பிரதிநிதிகள் மூலச்சி சீவலமுத்து குமார், வக்கீல் சரவணமணிமாறன், அண்ணாதுரை, இளைஞரணி அருள்ராஜ், கார்த்திகேயன், தகவல் தொழில்நுட்ப அணி பிரேம்ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story