உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா


உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x

பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்

தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்த நாள் விழா பெரம்பலூரில் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. தலைமை தாங்கி, கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.

மேலும், அவர் தூய்மை காவலர்கள் 200 பேருக்கு தலா ஒரு சேலை, 10 கிலோ அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளரும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான குன்னம் சி.ராஜேந்திரன், பிரபாகரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story