உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா


உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
x

அரியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான க.சொ.க.கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று தா.பழூரில், சுத்தமல்லி பிரிவு சாலையில் அமைந்துள்ள தி.மு.க. அலுவலகம் எதிரில் கட்சி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதலின்படி ஆண்டிமடம் கடைவீதி, வரதராஜன்பேட்டை, ரெட்டித்தத்தூர் ஆகிய ஊர்களில் பிறந்தநாள் விழா கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய பேரூர், கிளைக்கழகம் மற்றும் அணி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story