உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா


உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
x

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளர் பூ.சுப்பிரமணியன் தலைமையில் 46 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கு போர்வை, பாய், இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தி.மு.க. மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி இசக்கி பாண்டியன், பாளையங்கோட்டை பகுதி செயலாளர் அண்டன் செல்லதுரை, தி.மு.க. நிர்வாகி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு

தி.மு.க. இளைஞரணி ஆறுமுகராஜா தலைமையில், பாளையங்கோட்டை காந்திமதி ஆசிரமத்தில் ஆதரவற்றவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மானூர் மற்றும் நெல்லை கூட்டுறவு பேரங்காடி பகுதிகளில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிகோட்டை செல்லத்துரை, முகம்மது சைபுதீன், பேரங்காடி அய்யப்பன், பூமணி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காது கேளாதோர் பள்ளியில்...

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், மத்திய மாவட்ட செயலாளரும், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் ஏற்பாட்டில், தச்சை மண்டல தலைவர் ரேவதி பிரபு தலைமையில், பாளையங்கோட்டை பிளாரன்ஸ் காது கேளாதார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர். மாநகர துணை செயலாளர் மூளிக்குளம் பிரபு, மாநகராட்சி கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க., சேரன்மாதேவி மேற்கு ஒன்றியம் சார்பில், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்த நாளை முன்னிட்டு, சேரன்மாதேவி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு வீரவநல்லூர் ஊராட்சி செங்குளம் டி.டி.டி.ஏ. தொடக்கபள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு (மேற்கு), முத்துகிருஷ்ணன் (கிழக்கு), மலையான்குளம் ஊராட்சி தலைவர் சித்ரா, துணை செயலாளர்கள் சொரிமுத்து, கண்ணன், முத்துக்குமார், கிளை செயலாளர்கள் ஆசைதம்பி, கண்ணண், தகவல் தொழில்நுட்பஅணி பிரேம் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1,000 பேருக்கு பிரியாணி

விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான ஜெகன் தலைமை தாங்கினார். அம்பை ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர் கலந்து கொண்டு தி.மு.க. கொடி ஏற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினரும். அம்பை நகராட்சி தலைவருமான பிரபாகரன் 1,000 பேருக்கு பிரியாணி வழங்கினார்.

அரசு வழக்கறிஞர் காந்திமதிநாதன், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை யூனியன் துணைத்தலைவர் ஞானக்கனி ஸ்டான்லி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் கணேசன், மணிமுத்தாறு நகர செயலாளர் முத்துகணேஷ், பிரம்மதேசம் பஞ்சாயத்து தலைவர் ராம்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நோயாளிகளுக்கு பிரட், பழம்

அம்பை ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர் தலைமையில் சாட்டுபத்து பஞ்சாயத்தில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் அருண்தவசு பாண்டியன், பஞ்சாயத்து தலைவர் சாரதா சுப்பிரமணியன், இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு, சஞ்சய் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அம்பை நகர தி.மு.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினரும், நகரசபை தலைவருமான கே.கே.சி.பிரபாகரன் அய்யனார்குளம் தெரு, வேலாயுதம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு பிரட் மற்றும் பழவகைகள் வழங்கப்பட்டு, நகராட்சி அம்மா உணவகத்தில் காலை, மதியம் என இருவேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, நகராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு உணவு

கல்லிடைக்குறிச்சி நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும், பேரூராட்சி துணை தலைவருமான இசக்கி பாண்டியன் தலைமையில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மூத்த முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சிற்றுண்டி, ஆதரவற்றோர் காப்பகத்தில் மதிய உணவு, கல்லிடைக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story