உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம்


உதயேந்திரம்  பேரூராட்சி கூட்டம்
x

உதயேந்திரத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.பேரூராட்சி கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

உதயேந்திரத்தில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.பேரூராட்சி கூட்டம் நடந்தது.

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி வரவேற்றார்.

கூட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் 2023-24-ம் ஆண்டிற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ.9.95 கோடியில் குடிநீர் பராமரிப்பு பணிகள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்வது, பேரூராட்சி சார்பில் மேட்டுப்பாளையம் ரவுண்டானா பகுதியில் தினசரி சுங்க வசூல் கட்டணம் செய்யப்படுகிறது. இங்கு கட்டணம் வசூல் செய்பவர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி, பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இடையூறு செய்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த பகுதியில் தினசரி சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிரந்தரமாக ரத்து செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதியளித்தார்.

கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஆ.செல்வராஜ், ஏ.மரியஜோசப், சரவணன், எம்.பரிமளா, எம்.கீதா, உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story