தூத்துக்குடிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் - விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டனர்.
தூத்துக்குடி,
தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இல்லம் தேடி உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதனை தொடங்கி வைப்பதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.
இதனை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. தொண்டர்கள் பெருந்திரளாக திரண்டனர். கட்சிக் கொடிகளை ஏந்தியபடி, மேளதாளங்களோடு உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்கள் வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே ஒரே நேரத்தில் அதிகம் பேர் அங்கு குவிந்ததால், கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
Related Tags :
Next Story