உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார்


உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார்
x

தமிழகத்தின் மிகப்பெரிய துறைக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார் என பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கூறினார்

கள்ளக்குறிச்சி

தமிழகத்தின் மிகப்பெரிய துறைக்கு

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார்

பொன்.கவுதமக சிகாமணி எம்.பி. பேச்சு

திருக்கோவிலூர், டிச.5-

தமிழகத்தின் மிகப்பெரிய துறைக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. விரைவில் அமைச்சராக பொறுப்பேற்பார் என பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

திருக்கோவிலூரை அடுத்த முகையூர் ஒன்றியம் சித்தாமூர் கிராமத்தில் தி.மு.க. கொடி ஏற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் கண்டாச்சிபுரம் ஜி.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., வர்த்தக அணி செயலாளர் வீரபாண்டிய நடராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தி.மு.க. துணை செயலாளர் மற்றும் திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமிஉமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஒன்றிய அவைத்தலைவர் காத்தவராயன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து 200 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முக்கியமான துறைக்கு அமைச்சர்

பின்னர் அவர் பேசும்போது, சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக மீண்டும் பதவி வகித்து வரும் உதயநிதிஸ்டாலின் விரைவில் தமிழகம் முழுமைக்குமான மிகப்பெரிய அல்லது முக்கியமான துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்பார். அப்போது அவரது சேவை இன்னும் அதிகமாக இருக்கும். பொது மக்களின் குறைகளும் விரைவில் தீரும் நிலை ஏற்படும் என்றார்.

விழாவில் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, முகையூர் ஒன்றியக்குழு துணை தலைவர் மனம்பூண்டி பி. மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் கற்பகம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜீவ்காந்தி, தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் லூயிஸ், முருகையன், இளஞ்செழியன், ரவிச்சந்திரன், சாந்தகுமார், ஜீவானந்தம், திருக்கோவிலூர் நகர தி.மு.க அவைத்தலைவர் டி.குணா, கவுன்சிலர் சக்திவேல் தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர்கள் கண்ணன் மற்றும் ஏழுமலை ஆகியோர் நன்றி கூறினா்.

1 More update

Next Story