தமிழகத்தில் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் பொதுமக்களுக்கும்,அதிகரிகளுக்கும்பாதுகாப்பு இல்லை என்று உடுமலையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.குற்றம் சாட்டி பேசினார்.
ஆர்ப்பாட்டம்
உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்தியது. ஆடு, மாடு, கோழி, ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களால் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த திட்டங்களுக்கு தி.மு.க. அரசு திறப்பு விழா செய்து வருகிறது. உடுமலை நகராட்சிக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த பணிகள் தான் தற்போது செய்யப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவக்கல்லூரி அமைத்துக்கொடுத்தோம் அதற்கு தற்போதைய அரசு திறப்பு விழா செய்கிறது. இதுபோன்று அ.தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட ஏராளமான திட்டங்களுக்கு தி.மு.க. அரசு திறப்பு விழா செய்கிறது.
அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. அரசு மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்கவில்லை. 24 மணி நேரமும் பார் திறந்து வைத்துள்ளது. சாராயத்தால், போலி மதுபானங்களால் இறப்பு அதிகமாக உள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறியதால் கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது.பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.
ஒரு அரசு அமைகிறது என்றால் அது மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும். இந்த அரசு மக்களுக்கான இல்லை. அவர்களுக்கு தேவையான கம்பெனிகளை வைத்துக்கொண்டு வீட்டு வசதி நிலைகளை எடுத்து வியாபாரமாக செய்து வருகிறது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாத செயல்படாத அரசாக தி.மு.க. அரசு உள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் பொற்கால ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைவதற்கு அனைவரும் இரவு பகல் பாராது அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
அதைத்தொதமிழகத்தில் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லைடர்ந்து தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இந்தப்போராட்டத்தில் பல்லடம் எம்.எஸ்.ஆனந்தன் எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ.பரமசிவம், உடுமலை நகரச்செயலாளர் ஹக்கீம், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், அன்பர்ராஜன், பிரனேஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.