தயார் நிலையில் உடுமலை தீயணைப்புத் துறை
தயார் நிலையில் உடுமலை தீயணைப்புத் துறை
திருப்பூர்
தளி
வடகிழக்கு பருவமழைதொடங்க உள்ளதை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் படி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சென்னை இயக்குனர் உத்தரவின் படியும், திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அதிகாரி இரா. அப்பாஸ் அறிவுறுத்தலின்படி உடுமலை தீயணைப்பு நிலைய அதிகாரி கோபால் தலைமையில் நேற்று அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள உடுமலை தீயணைப்பு துறை உபகரணங்களுடன் தயாராக உள்ளதாக நிலைய அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story