மாணவர் பேரவை தொடக்கவிழா
உடுமலை ஸ்ரீ .ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரியில் கல்லூரிப் பேரவை மற்றும் பல்வேறு மன்றங்களின் தொடக்க விழா நேற்று ஜி.வி.ஜி. கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ணப்பிரசாத் தலைமை தாங்கினார். இயக்குனர் மற்றும் ஆலோசகர் ஜெ.மஞ்சுளா முன்னிலை வகித்தார். கல்லூரிப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறையின் தலைவர் மற்றும் இணை பேராசிரியருமான எஸ்.அறம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த இ.வி.சுவாமிநாதனுக்கு முதல்வர் ந.ராஜேஸ்வரி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.தொடர்ந்து மாணவப்பேரவைத்தலைவி 3-ம் ஆண்டு மாணவி லி.ரோஷினி அறிக்கை வாசித்தார். இதையடுத்து சிறப்பு விருந்தினர் மாணவிகளுக்கு உரிய சின்னங்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மாணவிகள் மத்தியில் மனநலன், உடல்நலன், நேர்மறை ஆற்றல், கனவுகளை காட்சிப்படுத்தி அதன் மூலம் நனவாக்குதல் மற்றும் மனதை ஒரு நிலைப்படுத்துதல் குறித்து தன்னம்பிக்கை ஊட்டும் உரை நிகழ்த்தினார்.
மேலும் நினைவு ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான எளிய பயிற்சிகளையும் அளித்தார். இதையடுத்து பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கு இனிப்பு, வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவச்செயலர் ஆர்.சிவரஞ்சனி நன்றி கூறினார்.