உடுமலை-மூணாறு சாலையில் மண் அரிப்பு


உடுமலை-மூணாறு சாலையில் மண் அரிப்பு
x

உடுமலை-மூணாறு சாலையில் மண் அரிப்பு

திருப்பூர்

தளி

பலத்த மழை காரணமாக உடுமலை-மூணாறு சாலையில் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது.

உடுமலை-மூணாறு சாலை

உடுமலையில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சரக்கு மற்றும் வாகன போக்குவரத்தும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி கேரளா மற்றும் தமிழகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் குடியிருப்புகளில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது.

இந்த நிலையில் சில மாதங்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் வனப்பகுதியில் பெய்து வருகின்றது. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. அத்துடன் உடுமலை-மூணாறு சாலையின் தாழ்வான பகுதிகளில் ஏற்படுகின்ற நீர்வரத்து சாலையில் வழிந்து சென்று வனப்பகுதியை அடைந்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக சாலையின் இரு புறங்களிலும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் செல்கின்ற வாகன ஓட்டிகள் விலகிச் செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

மண் ெகாட்ட வேண்டும்

தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு உடுமலை மூணாறு சாலை பெரிதும் போது உதவிகரமாக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற பலத்த மழையால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் ஓரத்தில் பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சாலையில் சிதறி கிடக்கின்ற கற்களால் சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடும் நிலையில் உள்ளது.

மேலும் சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது உதிரி பாகங்கள் பழுதடைந்து இயக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறது. எனவே அதிகாரிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக அமைக்கப்பட்டு உள்ள உடுமலை- மூணாறு சாலையை ஆய்வு செய்து அதன் ஓரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்புக்கு மண்ணை கொட்டி சீரமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.Next Story