உடுமலை நகராட்சி பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது?


உடுமலை நகராட்சி பூங்கா பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
x
திருப்பூர்


உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திரா சாலையில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி சேதமடைந்து வந்தது. அதுமட்டுமின்றி விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகரித்தும் போதை ஆசாமிகளின் புகலிடமாகவும் விளங்கியது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூங்காவில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டது.அந்த பணி முழுமையாக முடிவடையாமல் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்" பூங்காவில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் பூங்கா சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆரம்பம் என்னவோ நல்லாதான் இருக்கு ஆனா முடிவு சரி இல்ல என்பது போல பராமரிப்பு பணி அவ்வப்போது பெயரளவுக்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது.பணி தொடர்ந்து நடைபெறுமா அல்லது கிடப்பில் போடப்படுமா அதற்கென ஒதுக்கப்பட்ட நிதியும் முறையாக செலவிடப்படுகிறதா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து உள்ளது. ஏனெனில் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு பணியும் விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணமாகும். எனவே ராஜேந்திர சாலையில் உள்ள நகராட்சி பூங்காவை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்தனர்.


Next Story