உடுமலை அரசு கலைக்கல்லூரி கலந்தாய்வில் 165 பேர் சேர்ந்தனர்
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் 165 பேர் சேர்ந்தனர்.
மாணவர்களுக்கான கலந்தாய்வு
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-
2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. பொதுப்பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்வேறு கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 140 மாணவர்கள் சேர்ந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
165 மாணவ-மாணவிகள்
இதில் பிபிஏ பாடப்பிரிவில் 42 மாணவர்களும், பி.காம் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், பி.காம் (சி.ஏ) பாடப்பிரிவில் 33 மாணவர்களும்,
இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 31 மாணவர்களும், பொருளியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும் ஆக மொத்தம் 165 மாணவ-மாணவிகள் சேர்ந்தனர். சிறப்புப்பிரிவு கலந்தாய்வில் 21, பொதுப்பிரிவு கலந்தாய்வில் 2 நாட்களும் சேர்த்து 305 என மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல், தரவரிசை நகல், கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வர வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.