இங்கிலாந்து சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே பிச்சாவரம் வருகை


இங்கிலாந்து சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே பிச்சாவரம் வருகை
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காலநிலை மாற்றம் குறித்த ஆய்வுக்காக இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி தெரேசாகபே வருகிற 29-ந் தேதி பிச்சாவரம் வருகிறார். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அந்த நாட்டுக்கான இந்திய தூதரக இணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்

கடலூர்

பரங்கிப்பேட்டை

இங்கிலாந்து மந்திரி

இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி தெரேசாகபே வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிரச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு வருகை தருகிறார். பின்னர் அவர் அங்கு நடைபெற உள்ள காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வு பணியை தொடங்கி வைக்கிறார். இதையொட்டி இந்தியாவுக்கான அந்த நாட்டின் தூதரக இணை ஆணையர் ஆலிவர் நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு வந்தார். அவருடன் சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாசுமன், கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார், துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், தாசில்தார் செல்வகுமார் ஆகியோரும் உடன் வந்தனர்.

அதிகாரிகளுடன் ஆலோசனை

பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயண திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலிவர் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவருக்கு கிள்ளை பேரூராட்சி மன்றத்தின் சார்பில் வரவேற்பு அளித்து கிள்ளை பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வளர்ச்சி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story