உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்


உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெட்டிக்கடைக்காரரிடம் ரூ.3 ஆயிரம் மாமூல் வாங்கிய உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் சூப்பிரண்டு மோகன்ராஜ் நடவடிக்கை

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.மலையனூர் கிராமத்தில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்குள்ள கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடையின் உரிமையாளர் பாக்கியராஜ்(வயது 38) என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக பாக்கியராஜிடம் இருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலைய முதல் நிலை காவலர் பிரபாகரன் ரூ.3 ஆயிரம் பணம் வாங்கி இருந்ததும் மேற்படி விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பிரபாகரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். மேலும் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர், கடத்துவோர், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர், இவர்களுக்கு உடந்தையாக இருப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்தார்.

1 More update

Next Story