கவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இல்லாததால் குடும்பத்துடன் செல்லமுடியவில்லை - சுற்றுலா பயணிகள் வருத்தம்


கல்வராயன் மலையில் கவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி இல்லாததால் குடும்பத்துடன் சென்று குளிக்க முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. கல்வராயன்மலையில் 5 மேற்பட்ட நீர்வீழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் வகையில் படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக படகுகுளமும் செயல்பட்டு வருகிறது.

மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ சிறுவர் பூங்காவும் உள்ளது. இந்த நிலையில் கவியும் மேகம் நீர்வீழ்ச்சிகளில் தற்போது தண்ணீர் கொட்டுகிறது. இதனால் இளைஞர்கள் சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

இது பற்றி சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில் ,

கவியம் நீர்வீழ்ச்சியில் குளிக்க குடும்பத்துடன் வந்தோம். ஆனால் சாலை வசதி இல்லாததால் வந்து குளிக்க முடியவில்லை, என வேதனையுடன் கூறினார். மேலும் அவர் கூறுகையில் கல்வராயன்மலையில் உள்ள கவியம் மேகம், பெரியார் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இதில் பெரியார் நீர் வீழ்ச்சியில் மட்டும் தான் சுற்றுலாப் பயணிகள், பெண்கள் குடும்பத்துடன் வந்து குளிக்க முடிகிறது.

மீதமுள்ள அருவிகளுக்கு சாலை வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மேகம் கவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சாலை வசதிகள் இல்லாததால் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆனால் இளைஞர்கள் வெள்ளி மலையில் இருந்து தொரடிப்பட்டு வரை இருசக்கர வாகனத்தில் வந்து சுமார் 5 கிலோமீட்டர் நடந்து சென்று குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஆனால்,குடும்பத்தினர் ,பெண்கள் அந்த அருவிகளுக்கு செல்ல முடியவில்லை ,ஆகையால் கவியம் நீர்வீழ்ச்சிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story