அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்; 5 பேர் கைது


அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத்தொகை ரூ.8,110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த வைப்புத்தொகை கூடுதலாக உள்ளதாகவும், இதனை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரதம் இருந்த 5 பேரை சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கைது செய்தார்.


Next Story