அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும், விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து செய்யப்பட்டு உள்ளது.

ஆகையால் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள வழங்கப்பட்டு உள்ள இந்த காலநீட்டிப்பு அவகாசம் இறுதிவாய்ப்பை பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story