திருக்கோவிலூர்உலகளந்த பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் மற்றும் ஸ்ரீ தேகளீச பெருமாள் சாமி இரட்டை புறப்பாடு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூலவர் பூங்கோவல் தாயாருக்கு புஷ்பங்கி சேவையும், உற்சவர் புஷ்பவல்லி தாயார் மற்றும் ஸ்ரீ தேகளீச பெருமாளுக்கு மாலை அணிவித்து தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. இதில் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






