ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா
ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது
ஊஞ்சலூர் மற்றும் தாமரைப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்ககூங்களில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜ் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன், கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் முருகன், தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஞானாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை கொடுமுடி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் மேற்பார்வையாளர் கா.தேன்மொழி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள் செல்வி, சுகன்யா, சுகந்தி, சிறப்பு ஆசிரியர்கள் பிரபு, ரமேஷ், வசந்தி ஆகியோர் மேற்பார்வையில் கவின் கலை, இசை, மொழித்திறன், நாடகம், நடனம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.