உரிமை கோராத மோட்டார் சைக்கிள்கள் ஏலம்


உரிமை கோராத மோட்டார் சைக்கிள்கள் ஏலம்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் உரிமை கோராத மோட்டார் சைக்கிள்கள் ஏலம் விடப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

ஆலங்குளம் போலீஸ் உட்கோட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 மோட்டார் சைக்கிள்களுக்கான பொது ஏலம் நேற்று பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் நடந்தது.

ஏற்கனவே ரூ.3 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்து, டோக்கன் பெற்றவர்கள் இதில் பங்கேற்று ஏலம் மூலம் வாகனங்களை தேர்வு செய்து, அதற்கான தொகையினை செலுத்திவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்றனர்.


Next Story