அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ


அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்மாற்றுத்திறனாளிக்கு மின் ஆட்டோ
x

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின் ஆட்டோ வழங்கப்பட்டது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் பயனாளியாக மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மின் ஆட்டோவை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியத்துடன் 65 சதவீதம் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாக நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலின் போது பள்ளப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருநாவுக்கரசு மின் ஆட்டோ வாங்குவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். எந்த ஒரு விண்ணப்பத்தையும் குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த மனுவின் மீது ஒரே வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசின் மானியமாக ரூ.1 லட்சத்து 62 ஆயிரம், பள்ளப்பட்டி இந்தியன் வங்கி கிளை சார்பில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் கடன் உதவியுடன் மொத்தம் ரூ.4 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் மின் ஆட்டோ வழங்கப்பட்டு உள்ளது. கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரண்டு கைகளால் மட்டுமே இயக்கக்கூடிய வகையில் பிரத்யேகமாக இந்த மின் ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான வகையில் இந்த மின் ஆட்டோ வடிவமைத்து கொடுக்கப்பட உள்ளது. எனவே அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story