ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று கச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

இளையான்குடி,

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்படும் என்று கச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தகவல் தெரிவித்து உள்ளார்.

கச்சாத்தநல்லூர்

இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் கச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பெருமாள் இருந்து வருகிறார். அவர் தனது மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து கூறியதாவது:-

கச்சாத்தநல்லூர் சிங்க குடியாள் அம்மன் கோவில் சுற்றுப்புறதளம் புதிய பேவர் பிளாக் சாலை அமைத்து கோவில் குடிமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியின் 4-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோவிலின் சுற்றுப்புற தளம் புதிய பேவர் பிளாக் சாலையும், இதே போல கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் சிமெண்டு சாலைகளும், பேவர்பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மின்கோபுர விளக்குகள்

டாக்டர் அம்பேத்கர் நகரில் குளியல் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது மேலும் அதே பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வசதிக்காக சைக்கிள் நிறுத்தும் சிமெண்டு தளம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியின் சமையல் அறை கட்டிடம் அமைத்து கொடுத்தும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளி சுற்றுச்சுவர் கட்டி தரப்பட்டுள்ளது. கச்சாத்தநல்லூர் பகுதியில் 2-வது வார்டில் கண்மாய் கரைக்கு தடுப்பு சுவர் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் உள்ள ஊருணி கரையை சுற்றி கம்பி வேலி அமைத்து குளம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

ஊராட்சி மன்ற கட்டிடங்கள் மராமத்து பணியும், புனரமைப்பு பணிகளையும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் உயர்நிலை மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்கள்

வரும் ஆண்டில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய ஊரக பணியாளர்கள் மூலம் கிராமத்தின் அரசு புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் பசுமை நிறைந்த குறுங்காடுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிராம மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக நிறைவேற்ற அய்யனார் கோவிலில் மருதம் நகரில் புதிதாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் நகர் முதல் வடக்கு குடியிருப்பு வரை புதிய தார் சாலைகள் அமைக்கவும், கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடும்பதாரர்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்கள் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கண்மாய்கரைக்கு தடுப்பு சுவர்

பரமக்குடி-மானாமதுரை பிரதான சாலை முதல் சிங்கக் குடியாள் அம்மன் கோவில் வரை மெட்டல் சாலை அமைக்கவும், கச்சாத்த நல்லூர் கண்மாய்கரைக்கு மேலும் ஒரு தடுப்புச் சுவர் அமைக்கவும் திட்டங்கள் தயார் செய்து அரசின் அனுமதிக்காக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திரன் நகரில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியில் 2-வது வார்டு பகுதியில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற்ற புதிய கழிவுநீர் வாய்க்கால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கழிப்பறை சுகாதார கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கிராமத்தின் நீர்பாசன கண்மாய்க்கு புதிய வரத்து கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கிராம மக்களின் தேவையை அறிய கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தர கச்சாத்த நல்லூர் ஊராட்சி மன்றம் மகத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஊராட்சி மன்றத்தில் கிராமத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் போர்டு அமைத்து மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story