வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

வேலைவாய்ப்பற்றோர்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி

படித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 30-6-2023 அன்று 5 ஆண்டுகள் முடிவடைந்த, இதுவரை எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600, ரூ.750, ரூ.1,000 வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்தக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள தங்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச்சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு வந்து இலவசமாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story