அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

சிவகாசியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி கீழத்திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபு சம்பவத்தன்று அலுவல் பணி காரணமாக சிவகாசி கிழக்கு ஆலமரத்துப்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள புதுக்காலனி அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து சங்கிலிபிரபு சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


1 More update

Next Story