ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு


ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
x

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வில் 325 பேர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வில் 325 பேர் பங்கேற்றனர்.

ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் 35 பணியிடங்கள் (34 ஆண் மற்றும் 1 பெண்) காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆட்கள் தேர்வு நடைபெறும் என்றும், தஞ்சை மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டும் இந்த தேர்வில் பங்கேற்கலாம் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. ஏராளமானோர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.இந்தநிலையில் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதி மங்களேஸ்வரி, ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஊர்க்காவல் படைக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

325 பேர் பங்கேற்பு

இந்த தேர்வில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர். அவர்களின் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர் உயரம், மார்பளவு சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களில் இருந்து 35 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, முக்கிய பண்டிகை நாட்கள், அரசியல் தலைவர்கள் வருகையின்போது கூட்டத்தை கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளில் போலீசாருடன் இணைந்து செயல்படுவார்கள்.


Next Story