மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!


மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு!
x

மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடைபயணம் தொடங்குகிறார். நடைபயண தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் வந்து கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்.

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று, மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மின் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story