தரிசுநில மேம்பாட்டு பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
ஆயிலம், மேலகுப்பம் ஊராட்சியில் தரிசுநில மேம்பாட்டு பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு
ஆயிலம், மேலகுப்பம் ஊராட்சியில் தரிசுநில மேம்பாட்டு பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தார்.
ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் மேலகுப்பம் மற்றும் ஆயிலம் ஊராட்சிக்குட்பட்ட ஆயிலம் புதூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் நோக்கில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.
அதன்படி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சொட்டுநீர் பாசனம் மூலம் மா செடிகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை ஆற்காடு ஒன்றியக்குழு தலைவர் கே.புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவர் ஸ்ரீமதிநந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு செடிகளின் வளர்ச்சி, தரம், பயனாளிகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினரிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வின்போது ஆற்காடு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) வேலு, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபாவதி ஜெயபிரகாஷ் (ஆயிலம்), பாஸ்கரன் (மேலகுப்பம்), ஒன்றியக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.