எஸ்.புதூரில் ஒன்றியக்குழு கூட்டம்
எஸ்.புதூரில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சாதாரண ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய சேர்மன் விஜயா குமரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியன், ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் ஏற்றப்பட்டது. அவற்றை கூட்டம் அங்கீகரித்து. தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் துறையில் உள்ள திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன், ஒன்றிய துணை சேர்மன் வீரம்மாள் பழனிச்சாமி மற்றும் பலர் பேசினர். இதில், ஒன்றிய கவுன்சிலர்கள் ரேவதி செல்வராஜ், விஜயா கருப்பையா, ராஜாத்தி சிங்காரம், இந்திராகாந்தி சத்தியமூர்த்தி, சின்னம்மாள் மென்னன் மற்றும் அரசு ஒப்பந்தகாரர்கள், அரசு அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தவம் நன்றி கூறினார்.