30 நிமிடத்தில் முடிந்த ஒன்றிய குழு கூட்டம்


30 நிமிடத்தில் முடிந்த ஒன்றிய குழு கூட்டம்
x

ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் குறித்து யாரும் பேசாததால் தொடங்கிய 30 நிமிடத்திலேயே முடிவடைந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் குறித்து யாரும் பேசாததால் தொடங்கிய 30 நிமிடத்திலேயே முடிவடைந்தது.

செய்யாறு தாலுக்கா அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி தலைமை தாங்கினார். துணை தலைவர் அருணா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் பலரும் கலந்து கொண்ட நிலையில் 40 மன்ற பொருள்கள் குறிப்பு விவாதிக்க வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து மன்ற பொருள் தொடர்பாகவும், தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கை எதுவும் இருப்பின் தெரிவிக்கலாம் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கூறினார்.ஆனால் யாரும் கோரிக்கை குறித்தோ தீர்மானங்கள் குறித்தோ பேசாததால் 30 நிமிடத்திலேயே கூட்டம் நிறைவடைந்தது. ஒன்றிய குழு தலைவர் திலகவதி தனது குழந்தையுடன் மன்ற கூட்டத்தில் பங்கேற்றார். மன்ற கூட்டம் நடைபெறுகிறது என மற்ற துறை அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மற்ற துறை சார்ந்த அலுவலர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவில் மேலாளர் சசிகலா நன்றி கூறினார்.


Next Story