ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் 15-வது நிதி்க் குழு திட்ட த்தில் காங்கயம் வட்டார வளர்ச்சிக்கு ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சீரமைப்பு, சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியக் குழு தலைவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் குடிநீர்க் குழாய்கள் மேம்படுத்துவது, கிணற்று மின்மோட்டார் பழுது நீக்குதல், ஒன்றியத்திக்குப்பட்ட ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்தல் மற்றும் ஊதியம், சுகாதார உபகரணங்கள் வாங்குதல், காங்கயம் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்காக 3 ஆண்டுகளுக்கு மாத வாடகைக்கு ஒப்படைத்தல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலா தேவி, ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

---------------


Next Story