காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்


காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்
x

காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

திருப்பூர்

காங்கயம்

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று காலை ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார்.

 இதில் ஊராட்சிப்பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைப்பது, குடிநீர்ப்பணிகளுக்காக மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள், காங்கயம் நகரம் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இதில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப்பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


Next Story