காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
திருப்பூர்
காங்கயம்,
காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கயம் ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர் முன்னிலை வகித்தார். இதில் கோடையை முன்னிட்டு குடிநீர்க் குழாய்களை மேம்படுத்தல், புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு இடம் பெயர்ந்த பின்னர், தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படும் வகையில் பயன்படுத்துதல் என்பன உள்ளிட்ட 23 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாதேவி, ராகவேந்தரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காங்கயம் ஊராட்சி ஒன்றியப் பொறியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story