உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்


உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜான்சிராணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் முருங்கை மகாராஜா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து யூனியன் தலைவர் பேசுகையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி குலசேகரன்பட்டினத்தில் 3 முக்கியமான சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. கல்லாமொழியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. தசரா திருவிழாவிற்கு முன்பாக குலசேகரன்பட்டினத்திலுள்ள அனைத்து சாலைகளும் மரமாத்து செய்யப்பட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று கூறினார்.


Next Story