மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகம்


மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகம்
x

ஜோலார்பேட்டை பகுதியில் மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி இன்று பெரியகம்மியம்பட்டு பகுதியில் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து புத்துக்கோயில் செல்லும் சாலையில் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம் எல்ஏவுமான க.தேவராஜி தலைமை தாங்கினார்.

மத்திய ஒன்றிய செயலாளர் க.உமா கன்ரங்கம் வரவேற்றார்.

விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

முன்னதாக அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, ஆம்பூர் எம்எல்ஏ ஏ.சி. வில்வநாதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன், நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



Related Tags :
Next Story