மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் கன்னியாகுமரி வருகை
3 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மத்திய நிதி மந்திரி வருகை
மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் நேற்று கன்னியாகுமரி வந்தார். பின்னர் நேற்று மாலையில் ஒரு ஓட்டலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், எம்.பி. தொகுதி பொறுப்பாளர் ராஜ கண்ணன் ஆகியோருடன் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல தலைவர்களுக்கான கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
வரவேற்பு
முன்னதாக கன்னியாகுமரிக்கு வந்த பகவத் கிஷன்ராவ் கராத்தை, கலெக்டர் அரவிந்த் சந்தித்து புத்தகம் கொடுத்து வரவேற்றார். மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன் ராவ் கராத் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.