ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்ட செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திருக்குமார் வரவேற்றார்.

கோரிக்கைகள் குறித்து மாநில பொது செயலாளர் குணசேகரன், பொருளாளர் சத்திய சீலன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கிய அரசு வீட்டு மனைபட்டா அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களில் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர்கள் வழங்கிய வீட்டு மனை பட்டாக்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. இந்த இலவச வீட்டு மனைகளை தன் பிள்ளைகளுக்கு பெயர் மாற்றம் செய்யவோ, தானமாக எழுதி கொடுக்கவோ முடியாமல் போய்விட்டது. எனவே கிராம கணக்குகளில் சேர்க்க வேண்டும்.

வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாநில இணை பொது செயலாளர் பீமாராவ்மிலிந்தர், மாநில நிர்வாக குழு தலைவர் அதிரூபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story