பழைய பேப்பர் கடையில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் - மதுரையில் பரபரப்பு


பழைய பேப்பர் கடையில் பல்கலைக்கழக விடைத்தாள்கள் - மதுரையில் பரபரப்பு
x

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காணாமல் போன விடைத்தாள்கள் பழைய பேப்பர் கடையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரை,

மதுரை காமராஜர் தொலைதூர பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில் பழைய பேப்பர் கடையிலிருந்து அந்த விடைத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகள் எழுதி விடைத்தாள்களை கொரியர் மூலம் மதுரை காமராஜர் பல்கலைகழக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். சுமார் 500 முதல் 1500 மாணவர்கள் வரை அவர்கள் அனுப்பிய விடைத்தாள்கள் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆடு மேய்க்கச் செல்லும் வாலிபர்கள் சிலர் அலுவலகத்தின் ஜன்னல்களை உடைத்து விடைத்தாள்களை திருடி பழைய பேப்பர் கடையில் போட்டதாக கூறப்படுகிறது. பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விடைத்தாள்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டு விடைத்தாள்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பழைய பேப்பர் கடையிலிருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதனை மீட்டு தற்போது விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story