அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x

பூதலூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி;

பூதலூர் அருகே உள்ள காங்கேயம்பட்டி கல்லணை கால்வாய் பாலத்தின் அருகே அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த பூதலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பிணமாக கிடந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் உடல் சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

1 More update

Next Story