எரியாத தெருவிளக்குகள்


எரியாத தெருவிளக்குகள்
x

எரியாத தெருவிளக்குகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் டவுன் செல்லமுத்து தெருவில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருவில் அமைக்கப்பட்டுளள் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதோடு, இரவு நேரங்களில் அந்த பகுதியே இருட்டாக காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், பெண்கள் தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story