எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
சேலம்
ஓமலூர்:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது நாளாக கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைப்பு சாரா கட்டிட தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செம்மலை, மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மணிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story