அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நலவாாிய கண்காணிப்புக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சரோஜா முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் முத்துசாமி கண்டன உரையாற்றினார். 18 தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ரூ.7ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். நலவாரியம் மூலம் வீடு கட்ட மானியம் பெறும் முறையை எளிதாக்க வேண்டும்.

நலவாரியத்தில் பென்சன் பெற்றுவரும் தொழிலாளர்களின் ஆயுள் சான்றிதழ்களை புதுப்பிப்பதில் உள்ள இடையூறுகளை சரிசெய்ய வேண்டும். அமைப்புசாரா நலவாரியங்களுக்கு நிரத்தர நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டாிடம் கொடுத்தனர்.



Next Story