ஏரியில் மிதந்து யோகா செய்து அசத்திய மாணவர்
ஏரியில் மிதந்து யோகா செய்து மாணவர் அசத்தினார்.
அரியலூர்
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையபாடி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மகன் வீரமாமுனீஷ்வரன். இவர் இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தனது ஊரில் உள்ள ஏரியில் யோகாசனம் செய்து, அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் சிறுவர்கள் மூழ்கி உயிரிழக்கும் நிலையில், தண்ணீரில் மூழ்காமல் மிதந்து யோகா செய்து அசத்திய மாணவர் வீரமாமுனீஷ்வரனை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story