ஆனைமலை சித்த மருத்துவமனையில் பராமரிப்பின்றி காணப்படும் மூலிகை செடிகள்-உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆனைமலை சித்த மருத்துவமனையில் மூலிகை செடிகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
ஆனைமலை
ஆனைமலை சித்த மருத்துவமனையில் மூலிகை செடிகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
பராமரிப்பு இல்லை
ஆனைமலை தாலுகாவில் உட்பட்ட ஆனைமலை, காளியாபுரம், சேத்துமடை, பெத்தநாயக்கனூர், ஆழியார், டாப்ஸ்லிப், பெரிய போது பகுதிகளில் ஏழு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன அதில் சித்த மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என தனித்தனி பிரிவுகளில் தனி கட்டிடங்களும் உள்ளன. வேட்டைக்காரன் புதூர் மற்றும் கோட்டூர் பகுதிகளில் 2 அரசு மருத்துவமனைகள் உள்ளன. அதில் ஒரு சித்த மருத்துவ கட்டிடம் உள்ளது. ஆனைமலை மற்றும் வேட்டைக்காரன் புதூர் சித்த மருத்துவ வளாகத்தில் கற்பூரவள்ளி, நொச்சி இலை, தூதுவளை உள்ளிட்ட எண்ணற்ற மூலிகை செடிகள் உள்ளன. ஆனால் அதனை பராமரிப்பதற்கு போதிய அளவு பணியாளர்கள் இல்லை. தற்போது கோடை காலம் என்பதால் எண்ணற்ற மூலிகை செடிகள் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து வீணானது. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பணியாளர்களை நியமிக்க வேண்டும்
மூலிகை செடிகளை மருத்துவர்கள் வளாகத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் வளர்த்து வருகின்றனர். அதனை நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவைப்படும் போதுஇலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் பல நோயாளிகளுக்கு உதவிகரமாக இருந்தது. சில மாதங்களாக அடுத்தவர்கள் மட்டுமே செடிகளை பாதுகாத்து வருகின்றனர். போதிய பணியாளர்கள் வசதி இல்லாததால் தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதாலும் மூலிகைச் செடிகள் தாக்குப்பிடிக்காமல் காய்ந்து வீணாகின்றன. எனவே சித்த மருத்துவ நிலையங்களில் மூலிகைச் செடிகளை பாதுகாக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






